அதிரை MKN டிரஸ்டை நிர்வாகத்தை கண்டித்து தமுமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

அதிரை MKN டிரஸ்ட்டிற்க்கு சொந்தமான காதிர் முஹைதீன் கல்லூரியில் விரிவுரையாளர் பணியில் இணைய பல லட்சம் லஞ்சம் வாங்கியதாக கூறப்படுகிறது.

இதனை கண்டித்து தமிழ் நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் சார்பில் கல்லூரி வளாகம் முன் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

இது தொடர்பான ஆதாரங்கள் இருப்பதாகவும் தமிழகம் முழுவதும் தமுமுக & மமக கூட்டங்களில் இது தொடர்பாக பேசப்பட உள்ளதாகவும் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

தமுமுக மற்றும் மமக மாநில செயற்குழு உறுப்பினர் செய்யது அஹமது, மாவட்ட தலைவர் அஹமது ஹாஜா, நகர தலைவர் சாஹுல் ஹமீது முன்னிலையில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டு கல்லூரி நிர்வாகத்தின் மீதான எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

Close