சென்னை புதுக்கல்லூரி விளையாட்டு விழாவில் பதக்கங்களை வென்று குவித்த அதிரை மாணவர்கள்

சென்னை புதுக்கல்லூரியில் பல்வேறு துறைகளில் அதிரை மாணவர்கள் ஆண்டாண்டு காலமாக படித்து வருகின்றனர். கடந்த பல ஆண்டுகளாக படிப்பு மற்றும் விளையாட்டுக்களில் அதிரை மாணவர்கள் சாதனை படைத்து வருகின்றனர். அந்த வகையில் இன்று கல்லூரியில் நடைபெற்ற விளையாட்டு விழாவிலும் அதிரை மாணவர்கள் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

இதில் கல்லூரியில் B.Com மூன்றாம் ஆண்டு படித்து வரும் பழஞ்செட்டி தெருவை செர்ர்ந்த முஹம்மது சுஹைல் என்ற மாணவர் இந்த ஆண்டின் சிறந்த கைப்பந்து வீரருக்கான விருதை வென்றுள்ளார்.

அதிரை புதுமனைத்தெருவை சேர்ந்த முஹம்மது உமர் என்ற மாணவர் Triple Jump, Long Jump விளையாட்டுக்களில் முதலிடத்தையும், 200 மீ ஓட்டப்போட்டியில் 2வது இடமும், 100 மீ ஓட்டப்போட்டியில் 3-வது இடத்தையும் பிடித்து அசத்தினார். இவருக்கு இந்த ஆண்டுக்கான தடகள் சாம்பியன்சிப் பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

BCA 2ஆம் ஆண்டு படித்து வரும் அதிரை ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த இஃப்திகார் என்ற மாணவர் இந்த ஆண்டின் சிறந்த கால்பந்தாட்ட வீரர் என்ற விருதையும், 100 மீ, 1500 மீ ஓட்டப்போட்டிகளில் தங்கப்பதக்கத்தையும் வென்று அசத்தியுள்ளார். இவர்களுக்கு அதிரை பிறையின் வாழ்த்துக்களி தெரிவித்து கொள்கிறோம்.

Close