அதிரை செல்போன் ரீசார்ஜ் கடைகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்!

ஏர்டெல், ஜியோ, வோடஃபோன் நிறுவனங்கள் அனைத்தும் 4G சேவைக்கு முழுமையாக மாறிவிட்ட நிலையில், ஏர்செல் 4G உரிமங்களைப் பெறமுடியவில்லை. இதனால் 4G சந்தையில் ஆதிக்கம் செலுத்தமுடியாமல், 2G மற்றும் 3G சேவையை மட்டுமே அளித்துவந்தது. ஆனால், பல்வேறு நிதிநெருக்கடிகள் ஏற்படவே கொஞ்சம் கொஞ்சமாக தன் சேவைகளை குறைத்துக்கொண்டது.  இந்த ஆண்டு ஜனவரி மாதத்துடன் குஜராத், மகாராஷ்டிரா, ஹரியானா, இமாசலப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம் ஆகிய ஆறு இடங்களில் தன் சேவையை நிறுத்திக்கொள்ளப்போவதாக ட்ராயிடம் ஏர்செல் அறிவித்தது.

மேலும் தமிழகத்தின் பல பகுதிகளில் ஏர்செல் நெட்வொர்க் முழுமையாக செயலிழந்துள்ளது. இதனால் வேறு நெட்வொர்க்கிற்கு மாற முடியாமலும், ஏர்செல் எண்ணை பயன்படுத்த முடியாமலும் அதன் வாடிக்கையாளர்கள் சிரமப்படுகின்றனர். இந்த நிலையில் அதிரையில் உள்ள செல்போன் ரீசார்ஜ் கடைகளில் நெட்வொர்க் மாறுவதற்காகவும், ஏர்செல் செயலிழந்தது குறித்து விசாரிப்பதற்காகவும் பொதுமக்கள் கடந்த 2 நாட்களாக வருகை தந்தவாறு உள்ளனர். இதனால் அதிரை செல்போன் ரீசார்ஜ் கடைகள் மக்கள் கூட்டம் வழக்கத்திற்கு மாறாக அதிகரித்து காணப்பட்டது.

Close