Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரை காதிர் முஹைதீன் பள்ளி அருகே பேருந்து நிறுத்த நிழற்குடை அமைப்பு!

அதிரை காதிர் முஹைதீன் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் வெயிலில் பேருந்துகளுக்காக காத்திருந்து நிறுத்தங்களில் காத்திருக்கும் சூழல் நிலவி வந்தது. இந்த நிலையில் அவர்களுக்கு பயனளிக்கும் வகையில் அதிரை லயன்ஸ் சார்பில் பேருந்து நிலைய நிழற்குடை அமைக்கப்பட்டு இன்று திறக்கப்பட்டது. இதனை முன்னாள் ஆளுனர் முகம்மது ரபி திறந்து வைத்து சிறப்பித்தார். ஹாஜி முகம்மது முகைதீன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், முன்னாள் மாவட்ட ஆளுனர் பிரெம் மண்டலத்தலைவர் எஸ்.டி.எஸ்.செல்வம், வட்டாரத்தலைவர் பேரா.செய்யது அகமது கபீர் முன்னிலை வகித்தனர். பேரா.கணபதி அவர்களின் வரவேற்புரையுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சி நகர செயளாலர் சூப்பர் அப்துல் ரஹ்மான் அவர்களின் நன்றியுரையுடன் நிறைவு பெற்றது.

இதற்கான ஏற்பாடுகளை நகர பொருளாளர் ஹாஜி அப்துல் ஹமீது சிறப்பாக செய்திருந்தார். இதில், மாவட்ட தலைவர்கள் சாரா அகமது, சாகுல்ஹமீது, செல்வராஜ், ராமமூர்த்தி, ஆறுமுகசாமி,

மக்கள் தொடர்பாளர் சேக்கனா நிஜாம் மற்றும் உறுப்பினர்கள் முல்லை மதி, ஜலீல், ரெஜீஸ்கான், சார்லஸ், அப்துல்காதர் ஆகியோர் கலந்துகொண்டனர்.