அதிரையில் ஜெயலலிதாவின் பிறந்தநாளை இனிப்புகள் வழங்கி கொண்டாடிய அதிமுக வினர்!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அதிரையில் அதிமுக சார்பில் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அதிரை பேருந்து நிலையம் அருகே ஜெயலலிதாவின் படத்திற்கு மாலை அணிவித்த பிறகு, அங்கு திரண்டிருந்த தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சி அதிமுக வினர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதில், பட்டுக்கோட்டை ஒன்றிய செயலாளர் பாலகிருஷ்ணன், அதிரை நகர செயலாளர் பிச்சை, துணை செயலாளர் தமீம், நகர நிர்வாகிகள் ஹாஜா பகுருத்தீன், குமார், அபுதாஹிர், அஹமது தாஹிர் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Close