அதிரை ASC நடத்தும் மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி தொடக்கம்!

அதிரை ASC Sports club சார்பாக ஆண்டுதோறும் கிரிக்கெட் தொடர் போட்டி நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இன்று 10 ஆம் ஆண்டு கிரிக்கெட் தொடர் தரகர் தெரு ஜும்மா பள்ளி பின்புறம் உள்ள மைதானத்தில் தரகர் தெரு ஜமாத் தலைவர் முன்னிலையில் தொடங்கியுள்ளது. இன்று 24, நாளை 25-02-2018 ஆகிய இரண்டு நாட்களில் இந்த தொடர் நடைபெற உள்ளது.

இந்த தொடரின் முதல் பரிசாக – ₹10,000, இரண்டாம் பரிசாக – ₹8,000, மூன்றாம் பரிசாக – ₹6,000, நான்காம் பரிசாக – ₹4,000 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் கலந்துகொள்ளும் அணிகளுக்கு நுழைவு கட்டணமாக ₹500 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Close