கணவனுக்காக கல்லீரல் தானம் செய்த நிஷா!

பெரம்பலூரை சேர்ந்தவர் ஜாகீர்உசேன் (36). கார் மெக்கானிக். இவரது மனைவி நிஷா (34). ஜாகீர்உசேனுக்கு கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டது.

கல்லீரல் மாற்று ஆபரேஷன் செய்தால்தான் உயிர்பிழைக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டது. கோவை ஜெம் மருத்துவமனையில் இவர் அனுமதிக்கப்பட்டார். கடந்த 14ம்தேதி இவரது மனைவி நிஷா தனது கல்லீரலை தானம் செய்ய முன்வந்தார்.

அதன்படி, டாக்டர்கள் குழுவினர், லேப்ராஸ்கோபி அறுவை சிகிச்சை மூலம் நிஷாவின் கல்லீரலில் பாதியை வெட்டி எடுத்தனர். அதை, ஜாகீர்உசேன் உடலில் லேப்ராஸ்கோபிக் ஆபரேஷன் மூலம் பொருத்தினர். செயலிழந்த கல்லீரை வெட்டி அப்புறப்படுத்தினர்.

ஆபத்தான நிலையில் இருந்த கணவனுக்கு, தனது கல்லீரலை பாதி தானம் செய்து காப்பாற்றிய மனைவிக்கு பாராட்டு குவிந்தது. இதுபற்றி மருத்துவமனை தலைவர் டாக்டர் பழனிவேலு கூறுகையில், `ஐந்தரை மணி நேரம் ஆபரேஷன் நடந்தது. தற்போது, இருவரும் நலமாக உள்ளனர். உடல் உறுப்புகளில் தாமாக வளரும் தன்மை கொண்ட ஒரே உறுப்பு கல்லீரல். தற்போது இருவர் உடலிலும் பாதி அளவு மட்டுமே கல்லீரல் உள்ளது. இது, அடுத்த 60 முதல் 75 நாளில் முழுமையாக வளர்ச்சி அடைந்து விடும்.

Close