அதிரையில் அதிகரிக்கும் சமூக விரோதிகளின் அட்டூழயம்!

அதிரையில் உள்ள சுகாதார நிலை குறித்து நன் அனைவருக்கும் தெரியும். இது குறித்து பல்வேறு பதிவுகளை நமது அதிரை பிறை பதிவிட்டுள்ளோம். இதில் பொதுமக்கள் அதிரையின் சுகாதார சீர்கேடு குறித்த புகார்களுக்கு முன் வைக்கும் காரணம் பேரூராட்சி சரியில்லை. இதில் ஒரு பக்கம் உண்மை இருந்தாலும் பிறரை குறை சொல்லும் நாம் எந்த அளவுக்கு சரியாக நடந்துள்ளோம் என்பதை சிந்திக்க வேண்டும்.

ஒரு நல்ல திட்டத்தை அறிமுகம் செய்தால் நாம் அதற்க்கு ஒத்துழைப்பு கொடுக்கிறோமா என்பதை சிந்திக்க வேண்டும். சுகாதாரம் குறித்து குறை சொல்லும் நாம் நமது சுற்றுபுறத்தை சுத்தமாக வைத்துள்ளோமா? என்றால் இல்லை. வீட்டில் உள்ள குப்பைகளை பாலிதீன் பையில் கட்டி வீட்டில் இருந்தே ரோட்டுக்கு எறிகிறோம். அது யார் மீது விழுந்தாலும் நமக்கு கவலையில்லை. வீட்டுக்கு குப்பை அள்ள வருபவர்களிடம் சரியாக குப்பையை கொடுக்கிறோமா என்றால் அதுவும் இல்லை.

இந்த நிலையில், அதிரையில் சம்சுல் இஸ்லாம் சங்கம் மற்றும் சுற்றுசூழல் மன்றம் சார்பில் வைக்கப்பட்ட குப்பை தொட்டிகள் தொடர்ந்து ஒவ்வொன்றாக எரிக்கப்பட்டும் சேதப்படுத்தப்பட்டும் வருகின்றன. இந்த நிலையில் இன்று அதிரை ஆஸ்பத்திரி தெருவில் உள்ள குப்பை தொட்டி சமூக விரோதிகளால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு நல்லது செய்வதற்காக அதிரையில் பல இடங்களில் குப்பைத்தொட்டி வைத்துள்ள நிலையில், அவற்றை சமூக விரோதிகள் தீ வைத்கு எரித்து வருவது சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Close