அதிரையில் ASC நடத்திய கிரிக்கெட் தொடரில் AFCC அணி சாம்பியன்!

அதிரை ASC Sports club சார்பாக ஆண்டுதோறும் கிரிக்கெட் தொடர் போட்டி நடைபெற்று வருகிறது. அந்த வகையில், நேற்று முன் தினம் 10 ஆம் ஆண்டு கிரிக்கெட் தொடர் தரகர் தெரு ஜும்மா பள்ளி பின்புறம் உள்ள மைதானத்தில் தரகர் தெரு ஜமாத் தலைவர் முன்னிலையில் தொடங்கி நடைபெற்றது. இதில் அதிரை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பல்வேறு அணிகள் கலந்துகொண்டு விளையாடின. இதில் இறுதிப்போட்டியில் அதிரை AFCC அணி வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது. இதில் அதிரை ASC அணி இரண்டாவது பரிசையும், ABCC அணி 3-வது பரிசையும் கைப்பற்றியது.

Close