அதிரையில் விசித்திர சுவரொட்டி வைக்கப்பட்டுள்ளது!

அதிரையில் நிலவிய சுகாதார சீர்க்கேட்டின் காரணத்தினால் சில மாதங்களுக்கு முன் பல வகையான நோய்களினால் நமதூர் மக்கள் பாதிக்கப்பட்டதை நாம் அனைவரும் அறிவோம்.

முக்கிய இடங்களில் சில சங்கங்களால் குப்பை தொட்டி வைக்கப்பட்டு இருந்தும். ஒரு சிலர் முறையாக அதனை பயன்படுத்தி கொள்ளாமல் வீதியில் வீசி எரியும் அவலம் நாள் தோறும் நடந்து கொண்டு தான் இருக்கின்றது.

கண்ட இடங்களில் குப்பை கொட்டுபவர்களை கண்டிக்கும் வகையில் தனலெக்‌ஷ்மி வங்கி அருகே விசித்திர சுவரொட்டி வைக்கப்பட்டுள்ளது. மக்கள் நடமாடும் இடத்தில் குப்பை கொட்டுபவர்களை கண்டிக்கும் வாசகமும் செருப்பும் தொங்க விடப்பட்டுள்ளது.

Close