அதிரையில் சாலைகளை குதறிப்போட்ட அதிகாரிகள்… குமுறும் மக்கள்…

அதிரை பழஞ்செட்டித்தெரு, சுரைக்கா கொள்ளை உள்ளிட்ட பகுதிகளில் புதிதாக சாலை அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளது. இதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பாக பழைய சாலை பெயர்த்து எடுக்கப்பட்டது. இந்த நிலையில் பெயர்க்கப்பட்ட சாலைகளில் மற்ற பணிகள் தொடங்காததால் அவ்வழியாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 4 சக்கர வாகனங்கள் இந்த வழிகளை தவிர்த்து வேறு வழிகளில் சுற்றிக்கொண்டு செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. இந்த சாலைகளில் விரைந்து மற்ற பணிகளை தொடர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Close