வாடிக்கையாளர்களுக்கு மீண்டும் அதிர்ச்சியளித்த ஏர்செல்!

கடன் சுமையால் தத்தளித்து வருவதால் ஏர்செல் நிறுவனத்தின் சேவைகள் நிறுத்தப்படவுள்ளதாகக் கடந்த வாரம் செய்திகள் வெளியாகின. அதற்குக் காரணம் கடந்த வாரம் பல இடங்களில் ஏர்செல் நிறுவன சேவைகள் கிடைக்கவில்லை என்பதுதான். ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்த அந்நிறுவனம், கடன் சுமை இருப்பது உண்மைதான்; அதற்காக சேவை நிறுத்தப்படவில்லை. செல்போன் டவர் உரிமையாளர்களிடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாகவே சேவை தடைபட்டது என்று கூறி சேவையை மீண்டும் வழங்கியது. இதனால் வாடிக்கையாளர்கள் நிம்மதி அடைந்தனர்.

இந்நிலையில் வாடிக்கையாளர்களுக்கு மீண்டும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக, ஏர்செல் சேவையில் மீண்டும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அந்நிறுவன தென்னிந்திய சிஇஓ சங்கரநாராயணன் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதில், ‘செல்போன் கோபுரங்கள் வைத்திருக்கும் உரிமையாளர்கள் இடையே கருத்து வேறுபாட்டால் மீண்டும் டவர் சிக்னலில் சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் சேவை பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. எனவே, வாடிக்கையாளர்கள் மாற்று ஏற்பாடு செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே கடந்த வாரம் சேவை முடங்கிய நிலையில் தற்போது மீண்டும் முடங்க வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

Close