அதிரை பேரூராட்சி நிர்வாகமே : ஏன் இந்த பாரபட்சம்!

அதிரை இந்தியன் வங்கி துவங்கி சால்ட்லைன் தொடரும் பகுதிகளில் தரமான சாலைகள் சீரமைப்பு தீவிரமாக நடந்து வருகிறது.

நமதூரில் பேரூராட்சி நிர்வாகத்தினால் பல்வேறு இடங்கள் சாலைகள் அமைத்துள்ளர். ஆனால் அந்த சாலைகள் தரமுள்ளதா ? என்பது கேள்விக்குறி.

குறிப்பாக கடற்கரை தெரு, காலேஜ் சாலை, நடுத்தெரு சாலைகள் காணாமலே போனது. நடுத்தெருவில் சாலை அமைத்து 7 ஆண்டுகள் ஆகிறது இன்னும் புதிய சாலை அமைக்கபடவில்லை.

பேரூராட்சி நிர்வாகத்திற்கு அதிகளவில் வரி செலுத்தக்கூடிய மக்கள் தொகையில் கூடுதலானோர் வசிக்கும் பகுதிகளான வார்டுகளை புறக்கணிக்கிறதா பேரூராட்சி நிர்வாகம்.

ஒருதலை பட்சமாக செயல் படுவதாக பேரூர் நிர்வாகத்தின் மீது பொதுமக்கள் காட்டம் அடைந்துள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னால் பழைய போஸ்ட் ஆபீஸ் சாலை – ஆஸ்பத்திரி தெரு சாலை அமைத்த பேரூராட்சி நிர்வாகம். சாலையில் தடிமன் குறைவாகவும், புதிய சாலையில் பல இடங்களில் ஒட்டு போட்டுள்ளது.

புதிய சாலைக்கு ஒட்டு போட அவசியம் என்ன?

அங்கு சாலை அமைத்த காண்ட்ரக்ட்டர் பணம் வாங்காமல் இலவசமாக சாலை அமைத்தாரா? சாலைகளை பேரூர் நிர்வாகம் ஆய்வு செய்யாத காரணம் என்ன.

இந்தியன் வங்கி தொடர் புதிய சாலை:

ஒரு பகுதி மீது மட்டும் ஏன் இந்த அளவு அக்கரை. பிற பகுதிகள் மீது அநீதம் காட்டுவது ஏன்? இந்த பகுதிக்கு செய்வது போல் தான் பிற பகுதிக்கும் செய்திருக்க வேண்டும். ஏன் செய்யவில்லை?

இதில் பேரூர் நிர்வாகம் மட்டுமல்லாது பதவி முடிந்த சில கவுன்சிலர்களிம் தலையீடு இருக்கும் என சந்தேகிக்கப்படுகிறது.

வாக்கு வாங்கும் போது இருக்கும் விசுவாசம் அதற்க்கு பின்னும் ஓரளவாவது இருக்க வேண்டுமல்லவா. ஆனால் அப்படி ஏது இருப்பது போல் தெரிய வில்லை.

பிற பகுதி சாலை:

நீங்கள் செய்யும் வேலையில் நீதம் இருக்கிறதா?

Close