அதிரையில் ஸ்டாலின் பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடிய திமுக வினர்..!

அதிரையில் உள்ள அண்ணா படிப்பகத்தில் செயல்தலைவர் ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு நகர திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அண்ணா சிலைக்கு மாலை அணிவித்த பின் கட்சி கொடியை நகர அவைத்தலைவர் சாகுல் ஹமீது ஏற்றி வைத்தார். அதை தொடர்ந்து வண்டிப்பேட்டை, பேருந்து நிலையம், ஈசிஆர் சாலை உள்ளிட்ட ஊரின் முக்கிய இடங்களில் திமுக கொடியேற்றப்பட்டது.

இதில் பேருர் கழக துணை செயலாளர் அன்சர் கான், மாவட்ட பிரதிநிதிகள் இன்பநாதன், மீராசா பகுருதீன், முன்னாள் ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் சபீர்,முத்துராமன், ஜபருல்லா, முல்லை மதி, பசூல் கான், பாஞ்சாலன், சுப்பிரமணியன், ராஜா, தர்மராஜ், பால்ராஜ், முஹம்மது யூசுப், காதர் இப்ராஹிம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Close