பட்டுக்கோட்டை – காரைக்குடி இடையே அதிவேக ரயில் சோதனை ஓட்டம் தொடக்கம்

பட்டுக்கோட்டை – காரைக்குடி அகல இரயில்பாதையில் விரைவில் இரயில் பயணம் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பட்டுக்கோட்டை- திருவாரூர் இரயில்பாதையும் தீவிரமாக அமைக்கப்பட்டு வருகிறது.

பட்டுக்கோட்டை- காரைக்குடி சந்திப்பு இரயில் நிலையங்களுக்கிடையே புதிதாக மாற்றப்பட்டுள்ள அகல இரயில் பாதையில் சிறப்பு இரயிலை பயன்படுத்தி அதிவேக சோதனை ஓட்டம் 1.03.2018 அன்று மாலை பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தில் தெற்குவட்டம், ரயில்வே பாதுகாப்பு ஆணையர் திரு.மனோகர் அவர்கள் தலைமையில் துவங்கியது. பட்டுக்கோட்டை,அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டனர்.

Close