அதிரை வருகிறார் சீமான்… 9 ஆம் தேதி நாம் தமிழர் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்

அதிரையில் நாம் தமிழர் கட்சியின் கிளை தொடங்கப்பட்டு பலர் நிர்வாகிகளாக இணைந்துள்ளனர். இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் கொள்கைகளை அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு சேர்க்கும் நோக்கில் தமிழகம் முழுவதும் கொள்கை விளக்க பொதுக்கூட்டங்கள் நடைபெற்று வருகின்றனர். அந்த வரிசையில், அதிரையில் வரும் 9-3-2018 வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில் அதிரை பேருந்து நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார்.

Close