பட்டுக்கோட்டையில் திமுகவின் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்.. அதிரை நிர்வாகிகள் பங்கேற்பு!

தஞ்சை தெற்கு மாவட்ட வாக்குச்சாவடி முகவர்கள் பட்டியல் தயாரித்தல் தொடர்பாக ஊராட்சி செயலாளர்கள், நகர, பேரூராட்சி, வார்டு செயலாளர்கள், வாக்குச்சாவடி நிலைய முகவர்கள் கூட்டம் பட்டுக்கோட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று காலை நடைபெற்றது. இதில் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் துரை.சந்திரசேகரன், மாவட்ட பொருப்பாளர் செல்வம், மாவட்ட அவைத்தலைவர் கோவிந்தராசு, மதுக்கூர் ஒன்றிய செயலாளர் இளங்கோ, பட்டுக்கோட்டை நகர பொருப்பாளர் செந்தில்குமார், முன்னாள் எம்.எல்.ஏ அண்ணாதுறை, அதிரை நகர செயலாளர் இராம.குணசேகரன் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Close