காவல் நிலையம் இல்லாத காயல்பட்டினத்தில் போலீஸ் பூத் அமைப்பு!

திரையரங்கம், காவல் நிலையம், மதுபான கடை இவைகள் அனைத்தும் இல்லாத ஊர் என்று புகழுக்கு சொந்தமானது தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம். இந்த நிலையில், தற்பொழுது காயல்பட்டினத்தில் இரவோடு இரவாக புதிதாக போலீஸ் கண்காணிப்பு பூத் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி இளைஞர்கள் பூத் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். போலீஸ் பூத்தை அகற்றாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Close