நாம் அறிந்திராத இந்து உப்புவின் எண்ணற்ற உடல்நல நண்மைகள்!

இமாலயன் உப்பு எனப்படும் இந்துப்பு மிகத்தொன்மையான காலத்திலிருந்து, நம் முன்னோர் சமையலில் இடம்பெற்றுவந்த இந்துப்பு காலப்போக்கில், பயன்பாட்டிலிருந்து, விலகிவிட்டது. இந்துப்பு என்றால் என்ன? உலகில் உள்ள மலைத்தொடர்கள் எல்லாம் கடினமான கருங்கல் பாறைகளால் ஆனவை, சில வகை மலைகள் மட்டும் விதிவிலக்காக, கடினமற்ற உடையும்தன்மைமிக்கவையாகக் காணப்படுகின்றன. அவையே உப்புப்பாறைகள் என அழைக்கப்படுகின்றன. அந்த உப்பு பாறைகளிலிருந்து கிடைப்பதே, பாறை உப்பு எனும் இந்துப்பாகும், இதை ஆங்கிலத்தில் Himalayan Rock Salt என்று அழைப்பார்கள்

நமது நாட்டின் இமயமலைத்தொடரின் அருகில் உள்ள உப்புமலைகளிலும், பாகிஸ்தான் எல்லையையொட்டிய பகுதிகளிலிருந்தும் உப்புப்பாறைகள் நமக்கு கிடைக்கின்றன. இராஜஸ்தான், இமாச்சல பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்களில் பாறை உப்பு, பூமிக்கு அடியில் இருந்து, சுரங்கங்கள் மூலம் எடுக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் தூத்துக்குடி போன்ற சில இடங்களில், கிடைகிறது.

உலகத்தில் இரண்டாவது உற்பத்தி பாகிஸஂதானிலஂ ௨ளஂள குவேரா மலைத்தொடரில் அமைந்துள்ளது அதிளஂ உற்பத்தியகுமஂ அநஂத உபஂபை சமையலுக்கும் மருத்துவத்துக்கு பயன்படுத்தலாம்.

இந்துப்பில் உள்ள தாதுக்கள்: பாறைகளில் இருந்து வெட்டியெடுக்கப்படும் இந்துப்பு. சற்றே மங்கலான பழுப்பு மற்றும் சிவப்பு நிறத்தில் காணப்படும் இந்துப்பில், கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம், சல்பர், புளோரைடு, அயோடின் போன்ற தாதுக்களுடன் சோடியம் குளோரைடு அதிக அளவில் உள்ளது. சிவந்த வண்ணத்தில் உள்ள உப்பில் அதிகமான அயன் சத்து உள்ளது, மற்றதை விட சிவந்த உப்பின் விலை சற்று அதிகமாகும்.

மனிதருக்கு நலம் தரும் 80 வகையான கனிமத்தாதுக்களை, தன்னகத்தே கொண்டது. வட இந்தியர்கள், சிவ ராத்திரி போன்ற விரத நாட்களில், இந்துப்பைகொண்ட உணவுகள் தயாரித்து சாப்பிட்டு விரதம் முடிப்பர். அன்றாட உணவிலும் இந்துப்பை வட இந்தியர்கள் அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். இந்துப்பின் பயன்பாடு அவற்றின் நன்மைகள் குறித்து, தமிழ்நாட்டில் இன்னும் விழிப்புணர்வு ஏற்படவில்லை, ஆயினும், பல்லாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட பழமைவாய்ந்த தமிழ் சித்த மருத்துவத்தில், முக்குற்றம் எனக்கூறும் வாதம், பித்தம் மற்றும் கபம் உள்ளிட்ட வியாதிகள் போக்கும் மருந்துகள் தயாரிப்பில், மனிதருக்கு நலம் தரும் இயற்கை தாதுக்கள் நிரம்பிய இந்துப்பும் சேர்க்கப்பட்டது. இந்துப்பை உணவில் தினமும் உபயோகித்துவந்தால், வாதம், பித்தம் மற்றும் கபம் எனும் வியாதிகளின் தன்மைகள் நீங்கி, உடல் வலுவாகும். எளிதில் செரிமானமாகும் திறனுள்ளது, மனச்சோர்வு நீக்கும் தன்மைமிக்கது.

தைராய்டு பாதிப்பை போக்கும் : கண்களைக்காக்கும் ஆற்றல் உண்டு. தைராய்டு பிரச்னைக்கு மருந்தாகும். குளிக்குமுன், இந்துப்பை உடலில் தேய்த்து சற்றுநேரம் கழித்து குளித்துவர, உடல் அசதி நீங்கி, மனமும் உடலும் புத்துணர்ச்சி பெறும்.

டயாலிசிஸ் எனும் இரத்த மாற்றுமுறை மூலம், சிறுநீரக பாதிப்புக்கு வைத்தியம் செய்யவேண்டிய நிலையில் உள்ளவர்கள், அல்லது சிறுநீரகத்தையே மாற்ற வேண்டிய நிலையில் உள்ளவர்கள் எல்லாம், ஒரு தன்னம்பிக்கை முயற்சியாக, இரண்டு வாரம், இந்துப்பு கொண்டு உணவு சமைத்து சாப்பிட்டுவர, இரத்தத்தில் உள்ள குறைபட்ட தாதுக்கள் எல்லாம் இயல்பான அளவில் சரியாகி, சிறுநீரக இயக்கங்கள் சீராகி, உடல் நலம் பெறுவர். மேலும், உடல் வேதனையும் நீங்கிவிடும் என்பது சிலரின் கருத்தாகும்.

பற்கள் பாதிப்பு நீங்கும் : மேலும், தினமும் இந்துப்பைக்கொண்டு சமைத்த உணவை, வீட்டில் அனைவரும் சாப்பிட்டுவர, வியாதிகள் அணுகாத நல்வாழ்வை நலமுடன் வாழலாம். இந்துப்பு கலந்த இளஞ்சூடான வெந்நீரைக்கொண்டு வாய் கொப்புளித்துவர, வாய் துர்நாற்றம் நீங்கும், பல் வலிகள், ஈறு வீக்கம் போன்ற வாய் சம்பந்தமான வியாதிகள் தீரும்

மூல வியாதிகள் மற்றும் வயிற்றுப் புண்கள் நீங்க, இந்துப்பு மருந்தாக பயன்படுகிறது. சாதாரண கல் உப்பில் சேர்க்கப்படும் அயோடின், இந்துப்பில் இல்லாத காரணத்தால், அனைத்து மனிதர்களும் எல்லாநாட்களிலும் உணவில் பயன்படுத்த ஏற்ற வகையில், இந்துப்பில் இயற்கையான நன்மைகள், இயல்பாகவே அமைந்துள்ளது.

1. pH balance (ஹைட்ரஜன் திறன்) அமைப்புமுறை சமநிலைப்படுத்துவதன் மூலம் உடலில் கழிவை நீக்குகிறது.

2. அதிகமான கனிமங்களை அளிப்பதன் மூலம் நீரேற்றம்அ திகரிக்கிறது.

3. உடலின் கனிம நிலையத்தை மேம்படுத்துகிறது

4.இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது

5. ஹார்மோன் பிரச்சினை உள்ளவர்களுக்கும் உதவுகிறது

6. குறிப்பாக இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது

7. இரத்த சர்க்கரை மற்றும் ஹார்மோன் சமநிலையை ஆதரிப்பதன் மூலம் தூக்கம் அதிகரிக்கிறது

Close