சென்னையில் நடைபெற்ற அதிரை மேம்பாட்டுச் சங்கமத்தின் அறிமுக விழா!

அதிரையில் மக்களுக்கான அடிப்படை தேவைகளும், மேம்பாடுகளும் அரசால் புறக்கணிக்கப்பட்டு வருகின்றன. பல்வேறு அமைப்புகள், இயக்கங்கள் இருந்தாலும் இந்த பிரச்சனைகளை களைவது இயலாத காரியமாக உள்ளது. எனவே அதிரை மக்களின் தேவைகள் மற்றும் கோரிக்கைகளை அடிப்படையாக கொண்டு அனைத்து தெருக்களின் ஒற்றுமையுடன் ஊரை முன்னேற்றும் வகையில் “அதிரை மேம்பாட்டுச் சங்கமம்” என்ற புதிய அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான அறிமுக மற்றும் கொள்கை விளக்க நிகழச்சி சென்னை மண்ணடியில் உள்ள இந்தியன் பேலஸ் அரங்கில் நடைபெற்றது. இதில் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் சென்னை வாழ் அதிரையர்கள் பலர் கலந்துகொண்டனர்.

கிராஅத்துக்கு பிறகு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் இதன் கொள்கையை எடுத்துறைத்தனர். பின்னர், கலந்துகொண்டவர்களுக்கு பேசுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அவர்கள் ஊருக்கு தேவையான முக்கிய அம்சங்களையும் தொடர்ந்து நிலவி வரும் பிரச்சனைகளையும் பகிர்ந்து கொண்டனர். பொரும்பாலும் ஊரில் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருவது, சுகாதாரம், மருத்துவம், அரசு நலத்திட்டங்கள் உள்ளிட்டவை குறித்த கருத்துக்களை பலர் முன்வைத்தனர். இதன் பின்னர் ஊரில் இதன் அடுத்த அமர்வை நடத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்த அமைப்பின் நோக்கம்:

1) நமது கொள்கை:

அதிராம்பட்டிணத்தின் அனைத்துப்பகுதி மக்களின் மேம்பாட்டிற்காக எந்தவொரு உள்நோக்கமும் பாகுபாடும் இன்றி செயல்படுதல்.

2) நமது நோக்கம்:

ஊரின் மேம்பாடு , நம் ஊரை ஒரு முன்மாதிரி ஊராக மாற்ற வேண்டும் (To make our native place into a Model Town).

3) நமது வேட்கை:

நாம் எடுத்த நல்ல முடிவுகளை ஒன்றாக இருந்து சாதிப்பதற்கு ஊரை ஒன்றிணைப்பது.

4) நாம் எதிர்கொண்டுள்ள சவால்கள்:

நம்முடைய கொள்கையானது ஒன்றிணைந்து செயல்படுதல் என்பதற்காக நமதூரின் அனைத்து கட்சிகள், இயக்கங்கள், சங்கங்கள், அமைப்புகள், ஜமாத்துகளை சார்ந்த நம் மண்ணின் மைந்தர்களை ஒருங்கிணைத்து எடுத்த காரியம் கைகூட பாடுபடுதல்.

5) நமது களம்:

நமது அதிரை மாநகர் எல்லைக்கு உட்பட்ட நம் மக்களின் பொன்னான மனது. ஏனென்றால் அங்கேதான் நமது ஒற்றுமை என்ற விதையை விதைக்க வேண்டியுள்ளது.

6) நமது வரம்பு:

நாம் அகிம்சையை கடைபிடிக்கும் மார்க்கத்தை சேர்ந்தவர்கள் என்பதால் நம் மார்க்கம் காட்டும் வரம்பு மீறாமல் காரியம் சாதித்தல்.

7) நமது குறிக்கோளை அடைய நம்முடன் பயணிப்பவர்கள் யார் யார் நமதூரின் மைந்தர்கள்:

அவர்கள் பல அமைப்புகளில் அங்கம் வகித்தாலும் அதிரையின் நலன் என்றதும் பாகுபாடின்றி அழைத்த குரலுக்கு ஓடி வருபவர்கள்.

8) நமதூரின் தலையாய பிரச்சனை எது:

இது அவ்வப்போது மாறுபடும் தன்மையுடையது என்பதால் அந்த நேரத்தில் எது பிரதானமோ அந்த பிரச்சனையின் முக்கியத்துவம் கருதி அதனை கையில் எடுத்து செயல்பட விழைவது.

Close