திருச்சியில் போலீசால் கொல்லப்பட்ட உஷாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய NWF அமைப்பினர்!

திருச்சி திருவெறும்பூர் அருகே இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்ற பெண்ணை காவல் ஆய்வாளர் காமராஜ் வாகனத்தை  துரத்தி உதைத்துள்ளார். இதனால் நிலைதடுமாறிய 3 மாத கர்ப்பிணி பெண் உஷா எதிரே வந்த வேன் மீது மோதி பலியானார். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் PFI யின் பெண்கள் அமைப்பான NWF இன் மாநில செயற்குழு உறுப்பினர் மஹதிய்யா, Womens India movement இன் மாநில செயலாளர் வழக்கறிஞர் சபியா, திருச்சி மாவட்ட NWF தலைவர் வழக்கறிஞர் மசூதா, SDPI கட்சியின் வழக்கறிஞர் பிரிவு மாநில துணை செயலாளர் அதிரை முஹம்மது நிஜாம் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். அத்துடன் உஷா கொலை தொடர்பாக SDPI கட்சியின் வழக்கறிஞர் அணி சார்பில் அனைத்து சட்ட உதவிகளையும் வழங்குவதாக அவர்கள் தெரிவித்தனர்.

Close