Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 55 வது கூட்டத்தில் திரளாக கலந்துகொண்ட அதிரையர்கள்!

அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 55 வது மாதாந்திர கூட்டம் கடந்த 09/03/2018 அன்று அல்ஹைர் பார்க்கில் குடும்ப நிகழ்ச்சியாக இனிதே நடைபெற்றது.

( அல்ஹம்துலில்லாஹ் )

நிகழ்ச்சி நிரல்:-

கிராத்                 : சகோ. அப்துல் ரஷீது ( செயலாளர் )

முன்னிலை          : சகோ. S.சரபுதீன் ( தலைவர் )

வரவேற்புரை        : சகோ. A.M.அஹமது ஜலீல் ( துணை செயலாளர் )

நன்றியுரை     : சகோ. A.சாதிக் அகமது ( இணை தலைவர் )

தீர்மானங்கள்:

1) அதிரை பைத்துல்மால் நடத்த இருக்கும் 15வது திருக்குர்ஆன் மாநாடும் மற்றும் 25 வது ABM வெள்ளி விழா சிறப்பாக நடைபெற துஆ செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

2) வழக்கம் போலவே இந்த வருடமும் ரமலான் இஃப்தார் நிகழ்ச்சி CLASSIC AUDITORIUM ஹாலில் சிறப்பாக நடத்துவதென முடிவு செய்யப்பட்டு அதற்கான பொறுப்புதாரிகள் நியமிக்கப்பட்டு கலந்து ஆலோசனைகள் நடைபெற்றது.

3) வரும் கூட்டத்திற்கு நமதூர் மக்கள் அனைவரையும் அழைத்து வருமாறு பொறுப்புதாரிகளுக்கு நினைவூட்டப்பட்டு மேலும் ID CARD விஷயமாக நினைவூட்டப்பட்டு முகவரிகள் கொடுத்து உதவுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

4) அல்ஹைர் பார்க்கில் கலந்து கொண்ட அணைத்து சகோதர சகோதரிகளுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

5) இன்ஷா அல்லாஹ் அடுத்த அமர்வு வரும் APRIL 09-ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை அஸர் தொழுகைக்கு பிறகு 4.30PM ஹாராவில் நடைபெறும் என முடிவு செய்யப்பட்டு அதில் அதிரை வாசிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.