அதிரை அசுத்தமாவதற்கு பேரூராட்சி மட்டும் தான் காரணமா? ஏன் இந்த அவலம்?

அதிரை தக்வா பள்ளி அருகே நடுத்தெரு வழி பொதுமக்களின் வசதிக்கேற்ப குப்பை கூண்டுகள் வைக்கப்பட்டது. சில தினங்களுக்கு முன்னர் அந்த குப்பை கூண்டு உடைக்கப்பட்டது. இதனால் பேரூர் நிர்வாகத்தின் Plastic குப்பை கூண்டு வைக்கபட்டது.

பொதுமக்கள் இதனை முறையாக பயன்படுத்தாமல் பள்ளி வாசல் சுவர்கள் மீது தூக்கி எரிகின்றனர். பள்ளிக்கு செல்லும் சாலைகளில் குப்பைகள் பரப்பபட்டு அவ்வழியே நடப்பவர்களுக்கு மிக இடையூராக இருக்கிறது. இதனால் நோய் பரவும் அபாயமும் இருக்கின்றது.

பள்ளிவாசலின் கண்ணியத்தை நம் மக்கள் சீரழிக்கின்றனரா? பள்ளிக்கு செல்பவர்கள் குழந்தைகளின் கழிவுகளை மிதித்து கொண்டு செல்வதை விரும்புகின்றனரா இந்த வேலையை செய்பவர்கள். இறை இல்லத்தை இப்படிதான் கண்ணியப்படுத்த வேண்டுமா?

Close