Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரையரின் பைக்கில் 35 கி.மீ ஊர் சுற்றிய பட்டுக்கோட்டை ஹோண்டா சர்வீஸ் செண்டர் ஊழியர்கள்

அதிரை சுரைக்கா கொள்ளை பகுதியை சேர்ந்தவர் அஜாருத்தீன். இவர் தன்னுடைய ஹோண்டா CBR பைக்கை சீர் செய்வதற்காக பட்டுக்கோட்டை பாளையத்தில் உள்ள மெக் ஹோண்டா சர்வீஸ் செண்டரில் விட்டுள்ளார். மறுநாள் பைக்கை இவர் எடுக்க செல்கையில், பைக்கில் உள்ள மீட்டரில் 35 கி.மீ அதிகமாக இருந்துள்ளது தெரிந்துள்ளது. இது குறித்து கடை ஊழியர்களிடம் அஜார் கேட்டதற்கு ஊழியர்கள் அலெட்சியாமாகவும், திமிராகவும் பதிலளித்துள்ளனர்.

வேலைக்கு பைக்கை விட்டால் அது இது எனக்கூறி வாடிக்கையாளர்களிடம் ஆயிரக்கணக்கில் பணத்தை கறக்கும் கடை ஊழியர்கள், பெட்ரோல் விற்கும் விலைக்கு பைக்கிலும் ஊர் சுற்றுவது வாடிக்கையாகியுள்ளது. ஏராளமான அதிரை வாடிக்கையாளர்களை கொண்டுள்ள மெக் ஹோண்டா நிறுவனம் இதனை கவனத்தில் கொள்ளாவிட்டால் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை இழக்க நேரிடும்.