அதிரையை நனைத்து சென்ற மழை!

அதிரையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பசுமையின்றி பாலை போல் அதிரை மாறியுள்ளதால் பகல் நேரங்களில் வெளியில் வருவதற்கு மக்கள் தயக்கம் காட்டுகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தென் தமிழகத்தில் அடிக்கடி மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று அதிகாலை அதிரையிலும் மழை பெய்தது. இதனால் வெப்பக்காடாக இருந்த ஊரில் லேசான குளிர்ச்சி நிலவியுள்ளது.

Close