நிரம்பி வழியும் குப்பை தொட்டிகள்… சிதறிக்கிடக்கும் குப்பைகள்! இது அதிரையின் நிலை

அதிரை சி.எம்.பி லைனில் ஒரு வாரத்திற்க்கும் மேலாக குப்பை எடுக்காததால் குப்பைக் கூண்டு நிரம்பி கீழே வழிந்து சிதறிக் கிடக்கிறது. இது அல்லாததற்க்கு காரணம் பொது மய்யானம் பகுதியில் வழமையாக கொட்டி வந்த குப்பைகளை கொட்ட விடமாட்டிகிறார்கள் அதனால் அள்ளுவதில்லை என்ற செய்தி கிடைத்தது. அப்ப மெயின்ரோடு பகுதில் அள்ளக்கூடிய குப்பைகளை எங்கு கொட்டுகிறார்கள்? இதன் மூலம் பேரூராட்சியால் சில தெருக்கள் புறக்கணிக்கப் படுகிறதா என்ற சந்தேகமும் எழுகிறது.

தெருக்களில் நாள் கணக்கில் குப்பையை எடுக்கவில்லை என்றால் பல நோய்கள் மக்கள தாக்க வாய்ப்புள்ளது. பேரூராட்சி இந்த விசயத்தில் பாராமுகமாக இல்லாமல் சரியான முறையில் கவனம் செலுத்தி குப்பைகளை அகற்ற வேண்டும் என்பதே ஊர் மக்களின் எதிர்ப் பார்ப்பு.

Close