Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரை காட்டுப்பள்ளிவாசல் அருகே பாலத்தில் ஆபத்தான பள்ளம்… அலட்சியம் காட்டும் அதிகாரிகள்

அதிரை காட்டுப்பள்ளிவாசல் அருகே கழிவுநீர் வடிகாலின் மீது சிறிய அளவிலான காங்கிரிட் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக இந்த பாலத்தில் பள்ளம் விழுந்தது. இது குறித்து அப்பகுதி மக்கள் புகார் அளித்தும் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இதனை அச்சத்துடம் கடந்து செல்லும் நிலை உள்ளது. பள்ளி குழந்தைகள் அதிகம் வசிக்கும் இப்பகுதியில் விபரீதங்கள் ஏற்படுவதற்கு முன்னர் இதனை அதிகாரிகள் சரி செய்வார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.