Adirai pirai
islam உள்ளூர் செய்திகள்

அதிரையில் புனித மக்கா, மதினாவை தர்காக்களுடன் ஒப்பிட்டு வைக்கப்பட்டுள்ள பேனர்களால் பரபரப்பு!

அதிரையில் ஒருகாலத்தில் மக்களால் அதிகம் விரும்பப்பட்ட கந்தூரிகள், தவ்ஹீத் எழுச்சியின் காரணமாக கடந்த 10 ஆண்டுகளாக பொழிவிழந்து காணப்படுகின்றன. இந்த நிலையில் இதனை மையப்படுத்தி அடிக்கடி தகராறுகளும், சர்ச்சைகளும் ஏற்படுவது வாடிக்கையாக இருந்து வருகிறது. இதனால் சில தெருக்களின் வழியாக கந்தூரி கூடுகளை எடுத்து செல்வதற்கும் சில ஆண்டுகளாக தடை விதிக்கப்பட்டுள்ளன. இது போன்ற காரணங்களால் கந்தூரி என்னும் இஸ்லாத்துக்கு புறம்பான பாவ விழாவை அதிரை மக்கள் காலப்போக்கில் மறந்து வருகின்றனர். இந்த சூழலில் இன்று அதிரையில் நடைபெறும் கந்தூரி ஒன்றின் விளம்பரத்தில் இஸ்லாமியர்களின் புனித தளங்களான மக்கா, மதினா, பைத்துல் முகத்திஸ் ஆகியவற்றை தர்காக்களுடன் ஒப்பிட்டு பேனர் வைக்கப்பட்டுள்ளது. இதனை கண்டு அதிரையர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.