BREAKING NEWS: அதிரையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட SDPI கட்சியினர் கைது!

விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் சார்பில் உத்தரப்பிரதேசத்தில் ரத யாத்திரை தொடங்கியது. உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், இந்த யாத்திரையைத் தொடங்கிவைத்தார். ராமஜென்ம பூமியில் ராமர்கோயில், ராமராஜ்யத்தை மீண்டும் அமைத்தல், கல்வி பாடத்திட்டத்தில் ராமாயணம், உலக இந்து தினம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த ரத யாத்திரை தொடங்கப்பட்டது. மத்திய பிரதேசம், மஹாராஷ்ட்ரா, கர்நாடகா, கேரளா வழியாகத் தமிழகம் வரும் ரத யாத்திரை இன்று (20.3.2018) ராஜபாளையம் வருகிறது. அங்கிருந்து ஸ்ரீவில்லிப்புத்துார், கல்லுப்பட்டி, திருமங்கலம் வழியாக மதுரை சென்று, அதே நாளில் பொதுக்கூட்டமும் நடைபெற உள்ளது.

இறுதியாக ராமேஸ்வரம் சென்று ரதயாத்திரை முடிவடைகிறது. கேரளாவிலிருந்து தமிழகம் வரவுள்ள இந்த ரதயாத்திரை மூலம் சட்டஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அனுமதி வழங்கக் கூடாது என எதிர்கட்சிகள் சட்டப்பேரவையில் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தமுமுக தலைவர் ஜவாஹிருல்லா, SDPI தலைவர் தெஹ்லான் பாகவி உள்ள்ட்ட பலர் கைது செய்யப்பட்டனர். இதனை கண்டித்து அதிரை பேருந்து நிலையத்தில் தமுமுக, SDPI கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.

தஞ்சை தெற்கு மாவட்ட மமக & தமுமுக தலைவர் அஹமது ஹாஜா கைதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்!

Posted by அதிரை பிறை on Monday, March 19, 2018

https://www.facebook.com/100010201621049/videos/599164427100273/

Close