அதிரையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுக வினர் கைது!

விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் சார்பில் உத்தரப்பிரதேசத்தில் ரத யாத்திரை தொடங்கியது. உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், இந்த யாத்திரையைத் தொடங்கிவைத்தார். ராமஜென்ம பூமியில் ராமர்கோயில், ராமராஜ்யத்தை மீண்டும் அமைத்தல், கல்வி பாடத்திட்டத்தில் ராமாயணம், உலக இந்து தினம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த ரத யாத்திரை தொடங்கப்பட்டது. மத்திய பிரதேசம், மஹாராஷ்ட்ரா, கர்நாடகா, கேரளா வழியாகத் தமிழகம் வரும் ரத யாத்திரை இன்று (20.3.2018) ராஜபாளையம் வருகிறது. அங்கிருந்து ஸ்ரீவில்லிப்புத்துார், கல்லுப்பட்டி, திருமங்கலம் வழியாக மதுரை சென்று, அதே நாளில் பொதுக்கூட்டமும் நடைபெற உள்ளது.

இறுதியாக ராமேஸ்வரம் சென்று ரதயாத்திரை முடிவடைகிறது. கேரளாவிலிருந்து தமிழகம் வரவுள்ள இந்த ரதயாத்திரை மூலம் சட்டஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அனுமதி வழங்கக் கூடாது என எதிர்கட்சிகள் சட்டப்பேரவையில் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் திமுக செயல் தலிஅவ்ர ஸ்டாலிந்தமுமுக தலைவர் ஜவாஹிருல்லா, SDPI தலைவர் தெஹ்லான் பாகவி உள்ள்ட்ட பலர் கைது செய்யப்பட்டனர்.

இதனை கண்டித்து அதிரை பேருந்து நிலையம் அருகே திமுக பிவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக சென்ற தனியார் பேருந்தை மறித்து அவர்கள் கோஷங்களை எழுப்பினர். உதையடுத்து அங்கு வந்த போலீசார், திமுக வினரை கைது செய்து சமுதாயக்கூடத்தில் தங்க வைத்தனர்.

Close