Adirai pirai
POLITICS உள்ளூர் செய்திகள் தமிழகம்

செங்கோட்டை போராட்ட களத்தில் கைது செய்யப்பட்ட அதிரை நாம் தமிழர் கட்சியினர்!

விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் சார்பில் உத்தரப்பிரதேசத்தில் ரத யாத்திரை தொடங்கியது. உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், இந்த யாத்திரையைத் தொடங்கிவைத்தார். ராமஜென்ம பூமியில் ராமர்கோயில், ராமராஜ்யத்தை மீண்டும் அமைத்தல், கல்வி பாடத்திட்டத்தில் ராமாயணம், உலக இந்து தினம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த ரத யாத்திரை தொடங்கப்பட்டது. மத்திய பிரதேசம், மஹாராஷ்ட்ரா, கர்நாடகா, கேரளா வழியாகத் ரத யாத்திரை இன்று (20.3.2018) தமிழகம் வந்தது. இதையடுத்து கண்டித்து செங்கோட்டையில் நடைபெற்ற போராட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுடன் அதிரையை சேர்ந்த நிர்வாகிகள் ஜியாவுத்தீன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு கைதாகினர்.