அதிரை ABCC நடத்தும் மாபெரும் மின்னொளி கிரிக்கெட் தொடர் போட்டி!

அதிரையின் முன்னணி கிரிக்கெட் அணிகளுள் ஒன்றான ABCC சார்பில் கடந்த 20 ஆண்டுகளாக கிரிக்கெட் தொடர் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இதில் கடந்த 2 ஆண்டுகளாக மின்னொளி கிரிக்கெட் தொடராக இந்த போட்டி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த முறை 21 வது ஆண்டாக கிரிக்கெட் தொடர் போட்டி வரும் 24 ஆம் தேதி இரவு கடற்கரைத்தெரு மைதானத்தில் நடைபெறுகிறது. மின்னொளி தொடராக நடைபெறும் இதில் முதல் பரிசாக 15 ஆயிரமும், 2 வது பரிசாக 11 ஆயிரமும், 3 வது பரிசாக 7 ஆயிரமும், 4 வது பரிசாக 5000 ரூபாயும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான நுழைவு கட்டணமாக 800 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Close