Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரை – பட்டுக்கோட்டை இடையிலான சாலை விரிவாக்கப்பணிகள் தீவிரம்! (படங்கள் இணைப்பு)

அதிரை பட்டுக்கோட்டை இடையிலான சுமார் 12 கி.மீ சாலையில் தினசரி ஆயிரக்கணக்கான இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில் கடந்த பல ஆண்டுகளாக குறுகலாகவும், குண்டும் குழியுமாகவும் காணப்பட்டு வந்தது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் இன்னல்களை சந்தித்து வந்தனர். மேலும் அடிக்கடி விபத்துக்களும், உயிர்சேதங்களும் ஏற்பட்டு வந்தன. இந்த நிலையில் இந்த சாலையை அகலப்படுத்தி சீரமைக்கும் பணி 4 கட்டங்களாக நடைபெற்று வந்தது. கரிக்காடு – முதல்சேரி இடையே முதல் கட்டமாகவும், வெட்டிக்காடு – பள்ளிக்கொண்டான் இடையே 2வது கட்டமாகவும், RKP முக்கம் – பழஞ்சூர் கரிக்காடு இடையே 3வது கட்டமாகவும், ஷிபா மருத்துவமனை – அதிரை மின்சார வாரியம் அமைக்கப்பட்டு வருகிறது.

முதல் இரண்டு கட்ட பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது RKP முக்கம் – பழஞ்சூர் கரிக்காடு, ஷிபா மருத்துவமனை – அதிரை மின்சார வாரியம் இடையிலான சாலைகள் விரிவுபடுத்தி அமைக்கப்பட்டு வருகின்றன.