திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் பட்டம் பெற்ற அதிரை மாணவர்கள்!

திருச்சியில் அமைந்துள்ளது பிரபல கலை மற்றும் அறிவியல் கல்லூரியான ஜமால் முஹம்மது கல்லூரி. தமிழக அளவில் தலைசிறந்த கல்லூரிகளில் ஒன்றாகவும் திருச்சியில் முதன்மை கல்லூரியாகவும் உள்ள இந்த கல்லூரியில் அதிராம்பட்டினம், மதுக்கூர், முத்துப்பேட்டை, மல்லிப்பட்டினம், கீழக்கரை, காயல்பட்டினம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதி மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இந்த கல்லூரியில் மாணவர்களுக்கான 64 வது ஆண்டு பட்டமளிப்பு விழா இன்று தொடங்கி அடுத்த நாட்களுக்கு நடைபெறுகிறது. இதில் இன்று Self Finance மாணவர்களுக்கு நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் BSc, BBA, BCA உள்ளிட்ட துறைகளில் அதிரையை சேர்ந்த மாணவர்கள் பலர் பட்டம் பெற்றனர். இவர்கள் எதிர்காலத்தில் மிகச்சிறந்த நாட்டிற்கும் வீட்டிற்கும் பயனுள்ளவர்களாக வருவதற்க்கு அதிரை பிறை சார்பாக வாழ்த்துகிறோம். 

Close