அதிரை ABCC அணி நடத்திய மின்னொளி கிரிக்கெட் தொடரில் அதிரை WCC அணி சாம்பியன்!

அதிரையின் முன்னணி கிரிக்கெட் அணிகளுள் ஒன்றான ABCC சார்பில் கடந்த 20 ஆண்டுகளாக கிரிக்கெட் தொடர் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இதில் கடந்த 2 ஆண்டுகளாக மின்னொளி கிரிக்கெட் தொடராக இந்த போட்டி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த முறை 21 வது ஆண்டாக கிரிக்கெட் தொடர் போட்டி நேற்று 24 ஆம் தேதி இரவு கடற்கரைத்தெரு மைதானத்தில் தொடங்கியது. இதில், அதிரிஅ சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பல அணிகள் கலந்துகொண்டு விளையாடின.

இன்று மாலை நடைபெற்ற இறுதி போட்டியில் அதிரை WCC அணி, அதிரை ABCC அணிகள் மோதின. இதில் WCC அணி வெற்றி பெற்று முதல் பரிசான 15 ஆயிரத்தை வென்றது. ABCC அணி 2 வது பரிசையும், ASC அணி முன்றாவது பரிசையும், ABCC B அணி 4 ஆம் பரிசையும் வென்றன. இவர்களுக்கு அதிரை பிறையின் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.

Close