அதிரையில் அப்துல்கலாம் கல்வி மன்றம் சார்பில் நீர், மோர் பந்தல் அமைப்பு!

அதிரையில் மார்ச் மாதம் தொடங்கியதில் இருந்து வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பகல் நேரங்களில் வெளியில் வருவதை மக்கள் தவிர்த்து வருகின்றனர். இந்த சூழலில் அதிரை ஈசிஆர் சாலையில் பெண்கள் மார்க்கெட் பகுதி அருகே அப்துல் கலாம் கல்வி மன்றம் சார்பில் கோடைக்கால நீர், மோர் பந்தல் தொடங்கப்பட்டுள்ளது. முதல் நாளான இன்று மோர், தர்பூசனி பழம் போன்றவை வழங்கப்பட்டன. இதனை ஏராளமான மக்கள் மகிழ்ச்சியுடன் பெற்று அருந்தினர்.

Close