பட்டுக்கோட்டையில் இயக்கப்பட்ட சிறப்பு ரயில் – நெகிழ்ச்சியுடன் பயணித்த அதிரையர்கள்!

பட்டுக்கோட்டை – காரைக்குடி வரை உள்ள அகலப்பாதையில் அதிவேக சோதனை ஓட்டம், கடந்த மார்ச் 1ந் தேதி நடைபெற்றது. இதையடுத்து, இந்த வழித்தடத்தில் பயணிகள் சிறப்பு ரயில் சோதனை ஓட்டம் கடந்த மார்ச் 26 ல் நடைபெற்றது.

இந்நிலையில், காரைக்குடி ~ பட்டுக்கோட்டை வழித்தடத்தில் மணிக்கு 73.47 கிலோ மீட்டர் வேகத்தில், ஒரு நாள் சிறப்பு ரயில் ( (DEMU) Diesel Electric Multiple Unit) சேவை இன்று (மார்ச் 30) வெள்ளிக்கிழமை காலை தொடங்கியது.

காரைக்குடியில் இருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு,

கண்டனூர் புதுவயல் (10.12 – 10.13),

பெரியக்கோட்டை (10.25 – 10.26),

வளரமாணிக்கம் (10.38-10.39),

அறந்தாங்கி (11.03 – 11.05),

ஆயங்குடி (11.18 – 11.19),

பேராவூரணி (11.45 – 11.47),

ஒட்டாங்காடு (12.13 – 12.15) வழியாக மதியம் 1 மணிக்கு பட்டுக்கோட்டை வந்து சேரும்.

அதேபோல், பட்டுக்கோட்டையில் இருந்து மதியம் 3 மணிக்கு புறப்பட்டு

ஒட்டாங்காடு (15.35 – 15.36)

பேராவூரணி (16.00 – 16.02),

ஆயங்குடி (16.30 – 16.31),

அறந்தாங்கி (16.45 – 16.47),

வளரமாணிக்கம் (17.14 – 17.15),

பெரியக்கோட்டை (17.26 – 17.27),

கண்டனூர் புதுவயல் (17.37 – 17.38) வழியாக மாலை 6 மணிக்கு காரைக்குடி வந்து சேரும்.

அறந்தாங்கி, பேராவூரணி, ஓட்டங்காடு ஆகிய ரயில் நிலையங்களில் 2 நிமிடங்கள் இடைவெளியிலும், மீதமுள்ள நிலையங்களில் 1 நிமிடம் மட்டும் ரயில் நின்று செல்லும்.

இதில் ஏராளமான அதிரையர்கள் மகிழ்ச்சியுடனுடன் நெகிழ்ச்சியுடனும் பயணம் செய்தனர்.

Close