அதிரை WFC கால்பந்தாட்ட தொடரில் பட்டுக்கோட்டை, அத்திவெட்டி அணிகள் வெற்றி! (படங்கள் இணைப்பு)

அதிரை WFC நடத்தும் 8ம் ஆண்டு மாபெரும் எழுவர் கால்பந்து தொடர் போட்டி மேலத்தெரு மைதானத்தில் நடைபெற்று வருகின்றது. மூன்றாம் நாளான இன்று இரண்டு  அட்டங்கள் நடைபெற்றன. முதல் ஆட்டத்தில் அதிரை SSMG குல் முஹம்மது அணியை எதிர்த்து AVK பட்டுக்கோட்டை அணியினர் களமிறங்கினர். பரபரப்பான இந்த ஆட்டத்தில் AVK பட்டுக்கோட்டை அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றனர்.

இரண்டாம் ஆட்டத்தில் நாட்டுச்சாலை அணியை எதிர்த்து அத்திவெட்டி அணியினர் விளையாடினர். துவக்கத்திலிருந்தே சிறப்பான ஆட்டத்தினை வெளிபடுத்திய அத்திவெட்டி அணியினர் நாட்டுச்சாலை அணிக்கு எதிராக கோல் மழை பொழிந்தனர். ஆட்ட நேர முடிவில் அத்திவெட்டி அணியினர் 4-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றனர்.

நாளைய தினம் 3 ஆட்டங்கள் நடைபெற உள்ளன. முதல் ஆட்டம் காலை அதிரை காதிர் முஹைதீன் ஆண்கள் பள்ளி கால்பந்து அணியை எதிர்த்து MFS அணியினர் விளையாடவுள்ளனர். இரண்டாவது ஆட்டம் மாலை KFC கரம்பயம் அணியை எதிர்த்து நிஃபா மதுக்கூர் அணியினரும் அடுத்த ஆட்டத்தில் பாஸ்கர் 7ஸ் பட்டுக்கோட்டை அணியினரும் MFC மேலநத்தம் அணியினரும் விளையாடவுள்ளனர்.

அதிரை WFC கால்பந்தாட்ட தொடர் குறித்த தினசரி முடிவுகளுக்கு அதிரை பிறையுடன் இணைந்திருங்கள்.

Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்

Close