Adirai pirai
FLASH NEWS உள்ளூர் செய்திகள்

அதிரை பேரூராட்சியின் நோய் பரப்பும் புதிய திட்டம்?

அதிரை பேரூராட்சியின் நோய் பரப்பும் புதிய திட்டம் அமல்படுத்தி உள்ளது.

சாலைகளில் கிடக்கும் குப்பைகளை கூட்டி அல்லாமல் சாலையோரம் தீயிட்டு எரிக்கின்றனர் பேரூர் ஊழியர்கள். எரிக்கப்படுவது காகிதங்கள், இலைகள் மட்டுமின்றி பிளாஸ்டிக் குப்பைகளையும் சேர்த்து எரிக்கின்றனர். பிளாஸ்ட்டிக் பொருளை எரிப்பதனால் ஏற்ப்படும் தீங்குகள் என்னவென்று பேரூர் நிர்வாகத்திற்கு தெரியாதா? இல்லை தெரிந்தும் நோய் பரப்புகின்றதா?

வாரத்தில் ஒரு நாள் தூய்மை செய்வதில் கூட மேலோட்டமாக கூட்டி குப்பைகளை சரியாக அள்ளாமல் சென்று விடுகின்றனர்.

மக்கள் கூடும் முக்கிய இடங்களான பள்ளி வாசல்கள், பள்ளிக் கூடங்கள் செல்லும் மாணவ, மாணவிகள், (மார்க்கெட்) கடைத் தெருவுக்கு வருவோர்களுக்கு பெரும் சஞ்சலத்தை ஏற்ப்படுத்துகிறது.

பேரூராட்சி இனியும் சமூக ஆர்வலர்களை எதிர்ப்பார்க்காமல் வரி கட்டும் மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தருவது பேரூராட்சியின் கடமை.

எனவே முக்கியமான இடமான வணக்கஸ்த்தலங்கள் பள்ளிக் கூட அருகில் குப்பை கூண்டுகளை வைத்து சரியான முறையில் பராமறிக்க வேண்டும் என்பது வரி கட்டுவோரின் எதிர்ப்பார்ப்பு.

ஒவ்வொருவரிடமும் வரியோடு திடக் கழிவுக்கு என்று தனியாக தொகை பேரூராட்சி மூலம் வசூல் செய்யப்படுகிறது.

இவ்விசயத்தில் பேரூராட்சி அதிக கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமா அல்லது புறக்கனிக்குமா ?