அதிரையில் ரோட்டரி சங்கம் சார்பில் மோர் பந்தல்!

தமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கம் சுட்டெரிக்கிறது. நாளுக்கு நாள் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வரும் வேளையில் பொது மக்களின் தாகம் தீர்க்கும் விதமாக 31/03/2018 அன்று அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பாக மோர்பந்தல் அமைக்கப்பட்டு பொதுமக்கள் சுமார் 300 க்கும் மேற்ப்பட்டவர்களுக்கு மோர் வினியோகம் செய்யப்பட்டது. இதில் அதிராம்பட்டினம் ரோட்டரி சங்க தலைவர் ஆறுமுகம்,செயலாளர் முகமது நவாஸ் கான்,பொருளர், அகமது மன்சூர்,மற்றும் சங்க உறுப்பினர்கள், அய்யாவு, வெங்கடேஸ், சாகுல் ஹமீது, சம்சுதீன், அப்துல் ஹலீம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Close