அதிரையில் நடைபெற்ற கைப்பந்து தொடரில் அசத்தல் வெற்றி பெற்ற BVC அணி!

அதிரை பீச் வாலிபால் கிளப் சார்பில் கடந்த 20 ஆண்டுகளாக கைப்பந்து தொடர் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு கடந்த மார்ச் 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் அதிரை கடற்கரைத்தெரு ஜும்மா பள்ளி மைதானத்தில் இந்த தொடர் நடைபெற்றது.

இதற்கு முதல் பரிசாக 10,000, இரண்டாம் பரிசாக 8,000 மூன்றாம் பரிசாக 6,000 நான்காம் பரிசாக 5,000 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டது.

இதில் பல சிறந்த அணிகள் கலந்துகொண்டு விளையாடினர். நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டிகில் அதிரை BVC மற்றும் அதிரை WSC அணிகள் மோதின. இதில் சிறப்பாக விளையாடிய BVC அணி கோப்பையை கைப்பற்றி அசத்தியது. அதிரை WSC அணி இரண்டாவது பரிசை தட்டிச்சென்றது.

Close