அதிரையில் சாலை மறியலில் ஈடுபட்ட அனைத்து கட்சி நிர்வாகிகள் கைது!

காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், விரைந்து மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும் அதிரையில் திமுக, மமக, கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சியினர் மெயின் நோடு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதில் மத்திய, மாநில அரசை கண்டித்து கோசங்கள் எழுப்பப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்து சமூக நல கூடத்தில் வைத்துள்ளனர்.

Close