அதிரையில் திமுக, மமக, முஸ்லீம் லீக் மற்றும் தோழமை கட்சிகளின் ஆலோசனை கூட்டம்!

காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காததை கண்டித்து தமிழகம் முழுவதும் வரும் 5-ஆம் தேதி முழு கடையடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

காவிரி மேலாண்மை வாரியத்தை உச்சநீதிமன்றம் கெடு விதித்தும் மத்திய அரசு அமைக்காததால் தமிழகம் போராட்ட களமாக மாறிவருகிறது. மத்திய அரசின் செயல்பாட்டை கண்டித்து அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளன.

இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக திமுக நடத்திய அனைத்து கட்சி கூட்டத்தில் வரும் 5 ஆம் தேதி மாநிலம் முழுவதும் கடையடைப்பு, சாலை மறியல், ரயில் மறியல் போராட்டங்களில் ஈடுபட உள்ளதாக முடிவு செய்யப்பட்டது.

இது தொடர்பாக இன்று அதிரையில் திமுக, மமக, முஸ்லீம் லீக், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டுகள், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. இதில் அதிரையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து நடத்தப்படும் போராட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு பின்னர் வணிகர்களிடம் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

Close