வெறிச்சோடிய அதிரை… திமுகவின் கடையடைப்பு போராட்டம் தொடக்கம்

காவிரி மேலாண்மை வாரியத்தை உச்சநீதிமன்றம் கெடு விதித்தும் மத்திய அரசு அமைக்காததால் தமிழகம் போராட்ட களமாக மாறிவருகிறது. மத்திய அரசின் செயல்பாட்டை கண்டித்து அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றன.

இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக திமுக நடத்திய அனைத்து கட்சி கூட்டத்தில் இன்று 5 ஆம் தேதி மாநிலம் முழுவதும் கடையடைப்பு, சாலை மறியல், ரயில் மறியல் போராட்டங்களில் ஈடுபட உள்ளதாக முடிவு செய்யப்பட்டது.

இன்று கடையடைப்பு போராட்டம் தொடங்கியுள்ளதை அடுத்து அதிரையில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் வீதிகள் வெறிச்சோடிக்கிடக்கின்றன.

Close