அதிரையில் போராட்டத்தில் ஈடுபட்ட திமுக, மமக உள்ளிட்ட கட்சியினர் கைது..!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து மாநிலம் தழுவிய மாபெரும் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் அதிரையில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் இன்று காலை அதிரையில் திமுக, மமக, நாம் மனிதர் கட்சியினர் தனித்தனியாக பேருந்து நிலையம் அருகே பேருந்தை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து சாரா மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

Close