அதிரையில் ரதயாத்திரைக்கு எதிரான மதச்சார்பின்மைக்கான அணிவகுப்பு!

அதிரையில் பாசிச மத வெறி ரத யாத்திரைக்கு எதிரான மதச்சார்பின்மை அணிவகுப்பு ஏப்ரல் 1 முதல் 10 வரை சென்னை முதல் கன்யாகுமரி வரை நிகழ்த்த திட்டமிட்டுள்ளனர் பாசிசத்திற்கு எதிரான மக்கள் மேடை அமைப்பினர்.

அதன் ஒரு பகுதியாக நமதூரில் இன்று மதியம் வண்டிப்பேட்டையில் துவங்கியது. தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தினர் தலைமையில் வாகன அணிவகுப்பு நடத்தப்பட்டது. சேர்மன்வாடி வழியாக பேரூந்து நிலையம் சென்றது.

பேரூந்து நிலையத்தில் பாசிச எதிர்ப்பு அமைப்பினரால் பாசிசத்திற்கு எதிரான பிரச்சார உரை நிகழ்த்தப்பட்டதோடு துண்டு பிரசுரங்களை விநியோகித்தனர் பாசிசத்திற்கு எதிரான மக்கள் மேடை அமைப்பினர்.

Close