அமீரகத்தில் இணையம் வழியில் வங்கி கணக்கு துவங்கலாம் – வங்கி செல்ல தேவையில்லை!

ஐக்கிய அமீரகத்தில் வசிப்பவர்களுக்கு அந்நாட்டின் வங்கியில் கணக்கு துவங்க பல சங்கடங்களும் பல விதிமுறைகளும் இருப்பதனால் பலர் அங்கு வங்கி கணக்கு துவங்க இயலாமல் போகிறது.

இனி அந்த கவலை வேண்டாம் எளிதில் இணையம் மூலம் வங்கி கணக்கினை துவங்குவதற்கான சேவை அங்கு நடைமுறையில் உள்ளது. இதனை பலர் அறிந்திருக்க மாட்டார்கள்.

Liv. DIGITAL LIFE STYLE BANK (Emirates NBD) இதில் நாம் வங்கிக்கு சொல்லாமலே இணையம் வழியில் வங்கி கணக்கு துவங்கலாம்.

Bank App: https://www.liv.me/en/

மேற்கூறிய மென்பொருளை download செய்து. அதனை பயன்படுத்தி SIGNup செய்து தேவையான தகவல்களை அளித்து கணக்கினை இலவசமாக துவங்கி கொள்ளலாம்.

கணக்கு துவங்க தேவையானவை:

1.) ஸ்மார்ட் ஃபோன்.
2.) ஐக்கிய அரபு கைபேசி எண்.
3.) எமிரேட்ஸ் ID (App வழியாக ஸ்கேன் செய்தால் போதுமானது).
4.) உங்களுக்கு 18 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும்.

Signup செய்த சில நாட்களுக்குள் நீங்கள் அளித்த அமீரக முகவரிக்கு ATM கார்டினை ஐ உங்களிடம் ஒப்படைப்பார்கள்.

நீங்கள் அந்த கார்டினை வைத்து Emirates NBD வங்கியிலோ அல்லது ATM மையங்களிலோ பணம் செலுத்தவும், எடுக்கவும் செய்யலாம் பிற ATM ல் பணம் எடுக்கும் பட்சத்தில் சேவை வரி வசூல் செய்யப்படும். நீங்கள் 23 வயதுக்கு மேல் உள்ளவராக இருந்தால் மாதம் 1500 திர்ஹம் இருப்பு தொகையாக உங்கள் கணக்கில் வைத்திருப்பது அவசியம். அப்படி இல்லையெனில் 10 திர்ஹம் உங்கள் கணக்கில் பிடிக்கப்படும்.

1500 இருந்த நிலையில் உங்கள் வங்கி ATM கார்டின் மூலம் 500 திர்ஹம் செலுத்துவதன் மூலம் இருப்பு தொகை குறைந்தால் உங்கள் கணக்கில் இருந்து குறைந்த இருப்பிற்கான 10 திர்ஹம் பிடிக்க மாட்டார்கள்.

இந்த மென்பொருள் பலருக்கு நன்மையளிக்கலாம்.

Source : UAE Central

Close