அதிரை சுற்றுவட்டார பகுதிகளில் மு.க.ஸ்டாலின் நடைப்பயணம்!

காவேரி மேலான்மை வாரியம் உடனடியாக அமைத்திட காவேரியை மீட்போம் என நடைப்பயணம மேற்கொண்ட திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று 08-04-18 ஞாயிறு காலை 7 மணிக்கு சூரக்கோட்டையில் தொடங்கி அதனைத் தொடர்ந்து கிராமங்கள் முழுவதும் நடைப் பயணம் மேற்கொண்டு மாலை 5 மணியளவில் பட்டுக்கோட்டை பேரூந்து நிலையத்திலிருந்து நடைபயணத்தை தொடர்ந்து முடித்து பக்கத்து கிராமங்கள் சென்றார்.

இந்நிகழ்ச்சியில் அண்ணண் டி.ஆர்.பாலு. A.K.S.விஜயன், து.செல்வம், பஞ்சூர்.K.செல்வம், அதிரை பேரூர் செயளாலர் இராம.குணசேகரன், துணைச்செயளாலர் A.M.Y.அன்சர்கான், முல்லை.R.மதி, T.முத்துராமன், மரைக்கா.K.இத்ரீஸ் அஹமது M.முகம்மது சரீப் , சுஹைப், மாவட்ட மற்றும் தோழமை கட்சியினர், ம.ம.க.மாவட்ட தலைவர் அஹமது ஹாஜா, முஸ்லீம் லீக் K.K.ஹாஜா நஜ்முதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Close