Adirai pirai
articles உள்ளூர் செய்திகள்

அதிரை சேர்மன் வாடியில் பேருந்து நிறுத்தம் இல்லையா?

அதிரையில் மிக முக்கியமான பேருந்து நிறுத்தங்களில் ஒன்றாக உள்ளது சேர்மன் வாடி. இந்த பேருந்து நிறுத்தத்தில் நடுத்தெரு, சுரைக்காய் கொள்ளை, சால்ட் லேன், புதுமனைத்தெரு, நெசவுத்தெரு, தட்டாரத்தெரு, கிட்டங்கித்தெரு, ஆலடித்தெரு உள்ளிட்ட பல தெருக்களை சேர்ந்த மக்கள் பேருந்து ஏறி சென்று வருகின்றனர். ஆனால் கடந்த சில மாதங்களாக இந்த பேருந்து நிறுத்தத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் நிற்காமல் செல்வதாக கூறப்படுகிறது. ஏன் நிற்கவில்லை என கேட்டால், சாலையில் வந்து நின்று கை காட்ட வேண்டியது தானே என்பது போன்று கடுகடுப்பாக பயணிகளை நடுத்துனர்கள் திட்டுவதாக குற்றச்சாட்டு எழுகிறது. தற்போதை வெயில் அதிகமாக இருப்பதால் மக்கள் நிழலுக்காக பேருந்து நிறுத்த நிழற்குடையில் அமர்ந்துள்ளனர். ஆனால் அதில் அமர்ந்துருப்பதை கண்டுகொள்ளாமல் பேருந்துகள் நிற்காமல் சென்றுவிடுவதால் பொதுமக்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகின்றனர். சில பயணிகள் வேறு வழியின்றி13 ரூபாய் டிக்கெட் கொடுக்கும் பேருந்தை பிடிக்க 50 ரூபாய் ஆட்டோவுக்கு செலவழித்து பேருந்து நிலையம் சென்று அங்கி பேருந்தை பிடித்து ஏறி செல்கின்றனர். இதனை சம்பந்தப்பட்ட துறையினர் கவணத்தில் கொள்ள வேண்டும்.