சிலிர்ப்பூட்டும் சிட்டுக்குருவிகள்… ஆர்வமுடன் வளர்க்கும் அதிரையர்! (வீடியோ உள்ளே)

அறிவியல் உச்சம் அடையாத அந்த பொற்காலத்தில் எல்லா வீடுகளிலும் சிட்டுக் குருவிகள் கூடு கட்டி வாழ்ந்தன. என்று மனிதன் அறிவியல் சார்ந்த துறையில் வெற்றிக் கண்டோம் என்று மார் தட்டிக் கொண்டானோ அன்றே சின்னஞ் சிறு குருவிகளாகிய சிட்டுக் குருவி, காய்ச்சல் குருவி, உள்ளான் குருவி போன்றவைகள் மறைய தொடங்கின. மறைந்த குருவிகளில் சிட்டுக் குருவி மட்டும் எப்போதாவது நம் கண்களில் தெண்பட்டு வருகின்றன.

அதிரை கரையூர் தெருவை சேர்ந்தவர் முத்துக்குமரன். கரையூர் தெரு பஞ்சாயத்து டிரஸ்டியான இவர் ஜக்கரியா காம்பிளக்சில் உள்ள தனது கடையில் சிட்டுக்குருவிகள் கூடு அமைத்துக் கொள்வதற்க்கு ஏதுவாக அட்டைப் பெட்டிகளை கட்டி தொங்க விட்டுள்ளார். மேலும் கூடுகட்டியுள்ள சிட்டுக்குருவிகளுக்கு உணவு, தாகத்தை தீர்த்துக் கொள்வதற்க்கு நீர் போன்றவைகளை வைத்து அழகு பார்த்து வருகிறார். இந்த குருவிகளின் செயல்களை பார்க்கையில், கீச்சென்ற அதன் சத்தத்தை கேட்கையில் நமது பரபரப்பான மனது சாந்தமடைகிறது.

சிட்டுக் குருவியின் சுட்டி வேலைகளை பாருங்கள். அருந்துவதற்க்காக வைக்கப் பட்டிருந்த நீர் தட்டில் உடல் சூட்டை

தனித்துக் கொள்ளும் அற்புதக்காட்சி மனதை நெகிழ வைக்கிறது.

Close